மணமேல்குடி அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ஆறரை பவுன் செயின் அபேஸ் மர்ம நபருக்கு வலை
மணமேல்குடி அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த வர் ஆத்மநாதன் மனைவி மாசிலா(65). இவர் கடந்த 21ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். 

மணமேல்குடி பேருந்து பேருந்து நிலையத்தில் நின்றபோது, மாசிலா தனது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க செயினை காணவில்லை. அவரது செயினை பேருந் தில் பயணம் செய்த மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாசிலா இச்சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாமு வேல்ஞானம் வழக்குப்பதிவு செய்து மாசிலாவின் நகையை திருடிச் சென்ற மர்மநபரைதேடி வருகிறார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments