என்ஜினீயரிங் கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!அண்ணா பல்கலைக்கழகத்தின் 260-வது சிண்டிகேட் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வில் பங்கு பெற வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த தேர்வர்கள் 2021-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் 2022-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கும் செமஸ்டர் தேர்வுகளில் பங்கு பெற்று அவர்களுக்கான அரியர் தேர்வுகளை எழுதலாம். 

அந்தவகையில் 2001-2002 (3-வது செமஸ்டர்), 2002-2003 (முதல் செமஸ்டர்)-ம் ஆண்டு முதல் படித்து அரியர் தேர்வு எழுத கடந்த 20 ஆண்டுகள் அவகாசம் முடிந்தவர்கள் இதில் பங்குபெற்று தேர்வு எழுத முடியும். இவர்களுக்கு தேர்வு முறை, தேர்வு மையம் அக்டோபர் இறுதிக்குள் அறிவிக்கப்படும். 

இந்த தேர்வர்கள் பல்கலைக்கழகம் பரிந்துரைத்தபடி, ஒவ்வொரு தாளுக்குமான சாதாரண தேர்வு கட்டணத்துடன் சிறப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரத்தை செலுத்த வேண்டும். தேர்வு எழுத இருப்பவர்கள் https://coe1.annauniv.edu/home/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிவு செய்ய வருகிற 4-ந்தேதி கடைசிநாள் ஆகும். 

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-22357267, 22357303, 22357272, 22357307 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments