வரும் 1-ந்தேதி முதல் மதுரை-துபாய் விமான சேவை


வரும் 1-ந்தேதி முதல் மதுரை-துபாய் விமான சேவை தொடங்க இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரையில் இருந்து துபாய்க்கு ஒப்பந்தப்படி அடுத்த மாதம் 1-ந் தேதி முதல், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்க இருக்கிறது. இதற்காக முன்பதிவு தொடங்கி உள்ளது. 

வாரத்திற்கு 3 நாட்களுக்கு மதுரை - துபாய் மற்றும் துபாய் - மதுரை வழித்தடத்தில் விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி, துபாயில் இருந்து மதுரைக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை - 3.35 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு மதுரைக்கு காலை - 9.20 மணிக்கு (இந்திய நேரம்) வந்து சேரும். 

அதுபோல் மதுரையில் இருந்து துபாயக்கு ஞாயிறு, புதன், வெள்ளி கிழமைகளில் காலை - 11.50 மணிக்கு (இந்திய நேரம்) புறப்பட்டு துபாய்க்கு மதியம் - 2.35 மணிக்கு (துபாய் நேரம்) சென்றடையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments