அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி


அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம் என்று தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments