இலுப்பூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை! புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு!!பிளஸ்-2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பி.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 21). கூலித்தொழிலாளியான இவர் 17 வயது பிளஸ்-2 மாணவியிடம் காதல் வயப்பட்டார். பின்னர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.இதனையறிந்த மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்வதாக கூறி மாணவியை திருப்பூருக்கு ரஞ்சித்குமார் கடத்தி சென்றிருக்கிறார். அங்கு அந்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். பின் மறுநாள் இலுப்பூர் அழைத்து வந்தார். இதற்கிடையில் ரஞ்சித்குமார் மீது மாணவியின் பெற்றோர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் 18 வயது நிரம்பாத சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் 2 பிரிவின் கீழ் ரஞ்சித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments