புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி, நோய் தணிப்பு சிகிச்சை மையம் தொடக்கம்!புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு தரைத்தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கு அருகில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், நோய் முற்றிய நிலையில் உள்ள பக்கவாதம், புற்றுநோய் போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தணிப்பு மற்றும் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

அதனைத்தொடர்ந்து இந்த மையத்தின் அருகிலேயே பூந்தோட்டம் ஏற்படுத்தி புதிதாக மலர்ச்செடிகள் நடப்பட்டது. மையத்திற்கு நோய் முற்றிய நிலையில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து மனதால் தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள `பசுமை நிறைந்த இன்பவனம்' என்ற பெயரில் இந்த பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கலையரசி, நிலைய முதல்வர் டாக்டர் இந்திராணி மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments