கட்டுமாவடியில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட SDPI கட்சி சார்பாக புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்!புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் SDPI கட்சி சார்பாக 18.09.2021 அன்று கட்டுமாவடி மாவட்ட அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செல்லத்தா (எ) முகம்மது மைதீன் அறந்தாங்கி தெற்கு தொகுதி செயலாளர் தொகுப்புரையும்,Dr.மு.மு.ஹனிபா மாவட்ட செயலாளர் வரவேற்புரையாற்ற, SAM.அரபாத் மாவட்ட பொதுச்செயலாளர் துவக்கவுரையாற்ற, U.செய்யது அகமது மாவட்ட தலைவர் தலைமை உரையாற்றினார்.

மேலும் பாசிசம் கோலோச்சுகிற காலத்தில் SDPIயின் அவசியம் என்ற தலைப்பில் சலாஹுத்தீன் மாவட்ட தலைவர் புதுக்கோட்டை மேற்கு, Postive Attidude for Leadership of Access India என்ற தலைப்பில் A.சாகுல் ஹமீது, Effective Management என்ற தலைப்பில் ஜியாவுதீன் மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை மேற்கு, State Politices என்ற தலைப்பில் U.செய்யது அகமது மாவட்ட தலைவர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இறுதியாக M.முகம்மது அஜீஸ் அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தகவல்:Dr.மு.மு.ஹனிபா, மாவட்ட செயலாளர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments