முஸ்லிம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் - M.H.ஜவாஹிருல்லா MLA கோரிக்கை!சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா (பாபநாசம்) பேசியதாவது:-

முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒக்கீடு கடந்த 10 ஆண்டுகளாக சரியாக கணக்கிடப்படவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். 

வக்பு வாரியத்தில் பதிவு செய்யாத பள்ளிவாசல்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வூதிய தொகை ரூ.3 ஆயிரத்தையும் ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். தற்போது ஆலயங்கள், மசூதிகள் கட்ட மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியதிருக்கிறது. ஆனால் அந்த இடத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. 

இதுகுறித்து 90 நாட்களில் முடிவெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேல்முறையீடு செய்ய குழு அமைக்க வேண்டும். ஒரு மாதத்தில் தீர்ப்புத்தர வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments