மன உறுதி இருந்தால் போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்: திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பேச்சு!



ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவின் சார்பில் கறம்பக்குடி அருகே உள்ள கிருஷ்ணம்பட்டியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ள சாராயம், போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி.) பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு இளைஞர் அமைப்பினருக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசுகையில், எந்தவித போதை பழக்கமாக இருந்தாலும் அது உடலுக்கும் மனதுக்கும் நிச்சயம் கேடு தரும். 

போதை பழக்கத்தில் உள்ளவர்கள் தவறான எண்ணத்தில் உள்ளனர். மக்களும் அதை நம்புகின்றனர். உடல்சோர்வுக்கும், வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும் போதை பழக்கத்தை தீர்வாக நினைக்கின்றனர். இது தவறான எண்ணம் ஆகும்.

போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் மன நிம்மதி பறிபோய்விடும். போதை பழக்கம் என்பது ஒரு நோய் அதில் இருந்து விடுபட சிகிச்சை அவசியம். மனஉறுதி இருந்தால் நிச்சயம் போதை பழக்கத்தில் இருந்த விடுபடலாம். போதை பொருட்கள் தயாரிப்பது, விற்பது போன்ற செயல்கள் கிராம பகுதியில் நடைபெறாத வகையில் ஊர் பெரியவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். 

இந்த கிராமத்தை போதை பொருள் அற்ற முன்மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டும் என்றார். இதில் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமுலாக்க பிரிவு) ஜெரினா பேகம், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments