மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!புதுக்கோட்டை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில், மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மணமேல்குடி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 30 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு இருசக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி, ரோலேட்டர் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

பின்னர் மாணவ-மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தும் முறை பற்றி இயன்முறை மருத்துவர் செல்வகுமார், மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு தெளிவாக எடுத்துக் கூறினார். 

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments