புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடியில் அதிகபட்சமாக 85 மி.மீ. மழைப் பதிவு!புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடியில் அதிகபட்சமாக 85 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

மணமேல்குடி-85 மி.மீ, ஆலங்குடி-74, பொன்னமராவதி- 72.40, ஆவுடையாா்கோவில்- 68.40, நாகுடி-67.20, திருமயம்- 66.20, அரிமளம்- 59.20, ஆயிங்குடி- 58, பெருங்களூா்- 57, ஆதனக்கோட்டை- 51, புதுக் கோட்டை- 44.50, கீழாநிலை- 40, காரையூா்- 36, குடுமியான்மலை- 34, அன்னவாசல்- 28, கறம்பக்குடி- 25.20, அறந்தாங்கி- 24.20, மீமிசல்- 23.20,கீரனூா்- 22, இலுப்பூா்- 20, கந்தா்வகோட்டை- 19, விராலிமலை- 18, மழையூா்- 16.20, உடையாளிப்பட்டி- 10.20 மி.மீ.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சராசரியாக 42.45 மி. மீட்டா் மழை பெய்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments