பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் புதிய மின்மாற்றி அமைத்த மாத்தூர் ஊராட்சி நிர்வாகம்!புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மாத்தூர் விவேகானந்தா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு குறைவழுத்த மின்சாரம் கிடைத்ததால் டி.வி, மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வந்தன.

ஆகவே, இப்பகுதிக்கு தனியாக மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. 

அதனை மின்வாரிய கீரனூர் செயற்பொறியாளர் முருகன், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் அனுப்பிரியா ராமமூர்த்தி ஆகியோர் இயக்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஜான்சிராணி, வார்டு உறுப்பினர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments