ஆவுடையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சிகளில் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர், சகோதரர், தந்தை அல்லது இதர உறவினர்கள் தலையீட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!பெண்கள் பதவி வகிக்கும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில், ஆண்கள் தலையீடு உள்ளதா என பொறுப்பு அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக உள்ளாட்சியில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில், 50 சதவீதத்துக்கு அதிகமாக பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் புதுக்கோட்டை அவர்களின் செயல்முறைகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது சட்டத்திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை அவமதிக்கின்ற செயலாக ஊராட்சி அமைப்புகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்,சகோதரர், தந்தை அல்லது இதர உறவினர்களின் குறுக்கீடுகள் ஊராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் இருப்பதால் அதனை தடுத்து நிறுத்திடவும், கண்காணித்திடவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

எனவே ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளைக் கொண்ட ஊராட்சிகளில் அவர்களது கணவர், உறவினர்கள் அல்லது நண்பர்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு மற்றும் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் குறுக்கீடுகள் இல்லாதவாறு தடுத்து நிறுத்திடவும், பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்ட ஊராட்சிகளை கண்காணித்திட இணைப்பில் காணும் தொடர்புடைய மண்டல துணை வட்டார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments