முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி; கீரமங்கலம் பகுதியில் மரத்திலேயே காயும் அவலம்!கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வரப்புகளிலும், ஊடு பயிராகவும் எலுமிச்சை, மிளகு மற்றும் முருங்கை மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

கீரமங்கலம் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது, கீரமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரங்கள் வளர்க்கப்படுகிறது. 10 ஆண்டுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு சுமார் 25 டன் வரை முருங்கைக்காய் உற்பத்தி செய்யப்பட்டு பல ஊர்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது.

ஆனால் தற்போது உற்பத்தி குறைந்திருக்கும் நிலையில் கட்டுப்படியான விலை கிடைக்காததால் பருவத்தில் காய் பறிக்காமல் மரங்களிலேயே முற்றி காய்ந்து கொண்டிருக்கிறது என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments