அறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!



அறந்தாங்கியில், இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமை வகித்தார். அறந்தாங்கி எல்.என்.புரம், சன்னதிவயல் ஆகிய பகுதிகளில் புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் சொர்ணராஜ் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments