கொரோனா ஊரடங்கால் பல மாதங்களுக்கு பிறகு மீமிசல் வார சந்தை மீண்டும் திறப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!!மீமிசலில் வார சந்தை வாரந்தோறும் புதன்கிழமையில் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாரந்தோறும் இங்கு குவிந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவது வழக்கம். இங்கு நூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டு தங்கள் பொருட்களை விற்று வந்தனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சந்தை செயல்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் செய்யப்பட்டதால் சுமார் பல மாதங்களுக்கு பிறகு புதன்கிழமையான நேற்று 22.09.2021 மீண்டும் மீமிசலில் வாரசந்தை செயல்பட ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் தடவையாக வார சந்தை திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை அதிகாலையிலேயே கொண்டு வந்து மீமிசல் சந்தையில் வியாபாரத்தை தொடங்கினர். ஆனால் சந்தையில் வழக்கமான கூட்டத்தைவிட குறைவாகவே மக்கள் வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் பல மாதங்களுக்கு பிறகு மீமிசல் வார சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments