ஆவுடையார்கோவிலில் தேசிய ஊட்டச் சத்து வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்!



ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச் சத்து வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு தொடங்கி தெற்குவீதி வழியாக வந்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார். 

ஊர்வலத்தில் ஆரோக்கிய வாழ்க்கை கல்வி, குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும், 6 மாதம் முதல் 2 வயது வரை இணை உணவு மற்றும் துணை உணவு தாய் பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். சரிவிகித உணவுகளைக் கொடுத்து குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்க வேண்டும். 

இதில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி மற்றும் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments