ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம்!ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூரில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரூர் ஆரம்ப சுகாதார நிலையமும், ஊராட்சி சார்பிலும் கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நடத்தினர்.

இந்த முகாமில் 210 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பெரியசாமி, கரூர் ஆரம்ப சுகாதார மருத்துவர் ஜெயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் ராமதுரை, வட்டார சுகாதார ஆய்வாளர் வீரகுமார் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments