சஃபியாவுக்கு நீதி வழங்க வேண்டி மீமிசலில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம் சார்பாக மீமிசல் பகுதியில் டெல்லியில் பெண் காவலர் சபியாசைஃபி கொடூர படுகொலையை கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் அபுதாஹிர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில்  மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, மாவட்ட முன்னால் பொருளாளர் சேக் அஜ்மல்கான், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பைசல் கான், முன்னால் மாவட்ட  செயலாளர் ஜாகுபர் அலி, மாநில விவசாய அணி செயலாளர் அஜ்மல்கான், மமக ஒன்றிய செயலாளர் வஹாப் நகர செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.  

மாவட்ட துணைச்செயலாளர் நவாஸ்கான், SMI மாவட்டச் செயலாளர் கலந்தர் பாட்ஷா, முன்னால் செயலாளர் முஸ்ஸம்மில் கான் கண்டன கோசமிட்டனர்.

தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா மற்றும் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சேக் தாவூதீன் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக பொறுப்பு குழு உறுப்பினர் MSK சாலிகு நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments