கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாம்!



கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மற்றும் மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மற்றும் மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவி சீதாலெட்சுமி தலைமை தாங்கினார். மீமிசல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். 

இந்நிகழ்வில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments