மாற்று சான்றிதழ் கேட்டால் முழு கட்டணத்தையும் கட்ட தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன முறையில் மனு!



தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு மாற்று சான்றிதழ் கேட்டால் அந்த ஆண்டு முழு கட்டணத்தையும் செலுத்தினால் தான் மாற்று சான்றிதழ் தருவோம் என்று கூறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் இயங்காமல் உள்ளது இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தற்போது தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தற்போது மாணவர் சேர்க்கையில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் தாங்கள் படித்த தனியார் பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற விண்ணப்பித்தால் அந்த ஆண்டுக்குரிய முழு கட்டணத்தையும் செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் தருவோம் என்று தனியார் பள்ளிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வற்புறுத்தி வருகின்றன.

இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் அரசு பள்ளியில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து குழந்தைகளுடன் ஊர்வலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments