புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி!புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டப் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வகையில் ரேஷன்கடை பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

முகாமை கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்து பேசுகையில், மாவட்டத்தில் 690 முழு நேர ரேஷன் கடைகளும், 311 பகுதி நேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 1,001 அங்காடிகள் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. 

இந்த அங்காடிகளில் 639 விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடையின் பராமரிப்பு, கடை தூய்மை, பொருட்கள் இருப்பு மற்றும் பராமரிப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, பொது மக்களுடன் கனிவான முறையில் பழகுதல், பணியாளர்கள் உடல்நலம் பாதுகாப்பு, மன அழுத்தம், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமை மற்றும் அனைத்து செயல்பாடுகளிலும் திறமையுடன் பணியாற்ற வேண்டியது அவசியமாகும். 

முதல்கட்டமாக புதுக்கோட்டை மற்றும் திருமயம் வட்டாரங்களில் பணியாற்றும் 100 விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை விற்பனையாளர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

பின்னர், விற்பனையாளர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கினார். முகாமில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) மாரி, துணைப்பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) அண்ணாத்துரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments