ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டி பத்திரம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு!



ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டி பத்திரம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து ஊராட்சிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை, கால்வாய்கள் 20-ந் தேதி முதல் 25-ந் தேதிமுடிய ஒரு வார காலத்திற்கு மெகா மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் நடத்தி கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் தூய்மைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை வடிகால் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. 

இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) பெரியசாமி ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாண்டி பத்திரம் ஊராட்சியில் தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்தபோது ஊராட்சி தலைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments