ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டி! புதுக்கோட்டையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!!எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபராக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய துணை தலைவர் தெஹ்லான்பாகவி, தேசிய பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜித், இலியாஸ் முகமது தும்பே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடுகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கின்றோம். வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து சட்டப்போராட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட 6 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments