அறந்தாங்கி IMA மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்தும், சிகரம் இலவச நீட் பயிற்சி மைய ஐந்தாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

அனிதாக்களை மருத்துவராக்கும் எங்கள் முயற்சி ஐந்தாம் ஆண்டாக தொடர்கிறது: அறந்தாங்கி IMA மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்தும், சிகரம் இலவச நீட் பயிற்சி மைய ஐந்தாம் ஆண்டு வகுப்புகள் நேற்று (25-09-21) துவங்கின.

    2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நம் பயிற்சி மையத்தில் அந்த ஆண்டில் 54பேரில் 9பேர் தேர்ச்சி பெற்றார்கள்.2019 ம் ஆண்டில் 104 பேரில் 17 பேர் தேர்ச்சி பெற்றார்கள். 2020இல்  கரோனா காரணமாக இணையதளம் வழியாக நடந்த பயிற்சியில் 19 பேரில் 9 பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதில் 3 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. 2021ஆம் ஆண்டு 100க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அந்த வேளையில் ஐந்தாம் ஆண்டு வகுப்புகள் நேற்று வெற்றிகரமாக தொடங்கின.

   விழாவிற்கு அறந்தாங்கி IMA தலைவர் Dr. வெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் Dr. தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். திசைகள் அமைப்பைச் சார்ந்த தோழமைகள் சற்குருநாதன், பாலகிருஷ்ணன், ஆண்டோ மற்றும் பயிற்சி மையத்தின் ஆணிவேராக இருக்கும் ஆசிரியர் திரு. முருகையன் திட்ட இயக்குனர் திரு பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவராக்கி, அவர்களது கழுத்துகளில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிவிடும் எம்முயற்சி எப்போதும் தொடரும்..

தொடர்புக்கு: திட்ட இயக்குநர், திரு.பாஸ்கரன்-+919791989169

நம்பிக்கையோடு

Dr. ச.தெட்சிணாமூர்த்தி, MBBS.,DDVL., ஒருங்கிணைப்பாளர், சிகரம் இலவச நீட் பயிற்சி மையம்,
அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்
9159969415

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments