நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலரை (VAO) மூன்று மாதமாக காணவில்லை! மாவட்ட ஆட்சியருக்கு பறந்த புகார்! 2 மணி நேரத்தில் கிடைத்த தீர்வு!!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரி (VAO) கடந்த மூன்று மதத்திற்கு மேலாக சரிவர அலுவலகத்திற்கு வருவதில்லை. இதானால் பல்வேறு சான்றிதழ்கள் குறித்து ஆவணங்கள் சமர்ப்பித்தல் மற்றும் கையெழுத்து வாங்க வரும் பொதுமக்கள் தினமும் அலையாய் அலைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலரை காணமுடியவில்லை என கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதனடிப்படையில் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர். 

கடந்த மூன்று மாத காலமாக இழுத்தடிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் பணி ஒரு மணி நேரத்தில் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு சம்மந்தப்பட்டவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தவர் கூறியதாவது,

மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 19.09.2021 அன்று மின்னஞ்சல் வழியாக புகார் அனுப்பினேன். அதனடிப்படையில் 20.09.2021 திங்கட்கிழமை அன்று வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தொடர்பு கொண்டு அந்த மனு சம்மந்தப்பட்ட ஆவணங்களை நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக விஏஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். சமர்ப்பித்த ஒரு மணி நேரத்திற்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் இணையதளத்தில் அதாவது இ சேவை மையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டேன் என அவருடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மேலும் இது போன்று யாரெல்லாம் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அவை அங்கீகரிப்படாமல் உள்ளதோ இது போன்று மின்னஞ்சல் வழியாக புகார் அனுப்பி தீர்வு என கூறினார்.

புகார் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்(email) முகவரி: collrpdk@nic.in

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments