கோபாலப்பட்டிணத்தில் காவல்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்!கோபாலப்பட்டிணத்தில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் சப்டிவிசன் மீமிசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று 21.09.2021 காலை அரஃபா தெருவில் உள்ள தங்க மஹால் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் சிறப்பு அழைப்பாராளாக கோட்டைப்பட்டிணம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் கோபாலப்பட்டிணம் ஜமாஅத் தலைவர்கள் ASM.செய்யது முகம்மது, OSM.முகம்மது அலி ஜின்னா மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments