புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு 1 முதல் 3-ந் தேதி வரை ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: கூட்டுறவு சங்கங்களின் அதிகாரி தகவல்!வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி திறக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும். மேற்கண்ட நாட்களில் பொருட்கள் வாங்காதவர்கள் வழக்கம்போல பண்டிகை முடிந்து 8-ந் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பொருட்கள் வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments