ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு!ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் சிறப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளை மாவட்ட உதவி திட்ட இயக்குனர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

தொண்டைமானேந்தல் ஊராட்சியிலிருந்து புண்ணியவயல் ஊராட்சிக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிக்கு மாற்று கருத்துரு கோரும் பணியிட தளப்பார்வை செய்து ஆய்வு செய்தார். 

மேலும் பாண்டிபத்திரம் மற்றும் திருப்பெருந்துறை ஊராட்சிகளில் நடைபெற்று வந்த நூறுநாள் வேலை திட்ட கண்மாய், வாய்க்கால் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது, ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பெரியசாமி உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments