புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு!புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரப்பகுதியில் டெங்கு காய்ச்சல் ஓரிரு இடங்களில் பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிற நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 20 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments