அண்ணலார் ஓர் அருட்கொடை..... மீலாத் சிறப்பு பயான்கள் கடந்த திங்கள்18-10-2021 நிறைவு பெற்றது




அண்ணலார் ஓர் அருட்கொடை.....

மீலாத் சிறப்பு பயான்கள் நேற்றுடன்  நிறைவு பெற்றது....

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா  மீமிசல் அருகில் உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் உள்ள ரஹீமா பரக்கத் மதரஸாவில்  ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை  அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றை (பிறப்பு முதல் இறப்பு வரை) ஒவ்வொரு நாளும் மக்ரிப் முதல் இஷா வரை மதரஸாவின் மாணவிகள் பின் வரும் தலைப்புகளில் சொற்ப்பொழிவு ஆற்றினார்கள்...

1) நபியின் பிறப்பு

2) நபியின் சிறு வயது பருவம்

3) நபியின் இளமை பருவம்

4) நபியின் நுபுவ்வத்
(நபி பட்டம்)

5) நபி தீனுக்காக பட்ட துன்பங்கள்

6) நபியின் ஹிஜ்ரத்

7) நபியின் நற்குணங்கள்

8) நபியின் எளிமை

9) நபி கலந்து கொண்ட யுத்தங்கள்

10) நபியின் குடும்பவியல்

11) நபியின் வணக்க வழிபாடு

12) நபியின் மரணம்

அந்நிகழ்ச்சிகள் மதரஸாவின் தலைமை ஆசிரியர்  மௌலவி, பாஜில் காரி, அல் ஹாஜ் , முகமது மைதீன் தாவூதி  தலைமையில் நடைபெற்றது

நிறைவு நாளான நேற்று  உலமாக்களின் சொற்ப்பொழிவுகள் நடைபெற்றது.....

ஏம்பக்கோட்டை  தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலானா ரபீக் ரியாஜி ஹஜரத் சின்னப்பள்ளி இமாம் மௌலானா, ஹாபிழ், ஜாபர் சாதிக் குதூஸீ  ஹஜரத் மற்றும்  மதரஸாவின் பேராசிரியர் மௌலானா முஜாஹித் முனீரி ஹஜரத் , மௌலானா ஹபீபுர்ரஹ்மான் ஹஜரத் போன்ற உலமாக்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்..


இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்று வெற்றிபெற்றவர்களுக்கு 🎁 பரிசுகள் வழங்கப்பட்டது.... அதேபோல் 12 நாட்கள் பயான் செய்த மாணவிகளுக்கு அல் ரஹீக் மக்தூம் என்ற அண்ணல் நபியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக  விளக்கும் சிறப்பான நூலை பரிசாக வழங்கப்பட்டது.... அப்பரிசுகளை  மதரஸா நிறுவனர் N.S. அயூப்கான் ஹாஜியார் சார்பாக  வழங்கப்பட்டது.... துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது.....


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments