மணமேல்குடியில் அதிபட்சமாக 185 மிமீ மழை பதிவு.!!



மணமேல்குடி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகப்படியாக மணமேல்குடி பகுதிகளில் 185 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாமல் விவசாயம் செய்ய யோசனையில் இருந்த மக்களுக்கு தற்போது பெய்த மழை வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

மணமேல்குடி -185, ஆதனக்கோட்டை -45, பெருங்களூர் - 78, புதுக்கோட்டை- 95, ஆலங்குடி - 87, கந்தர்வகோட்டை -24, கறம்பக்குடி - 35.20, மழையூர் -78.40, கீழணை - 38.20, திருமயம் - 42, அரிமளம் - 82.40, அறந்தாங்கி - 27.20, ஆயிங்குடி - 67.40, நாகுடி -64.20, மீமிசல் -78.20, ஆவுடையார் கோவில்-80.20, இலுப்பூர் -10, குடுமியான்மலை -49, அன்னவாசல் -38, விராலிமலை -17, உடையாளிப்பட்டி-9.40, கீரனூர் -30, பொன்னமராவதி -110, காரையூர் -51

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments