புதுக்கோட்டையில் நாளை (அக்.18) வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்ட முகாம்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 வங்கிகளும், அதனுடைய 217 கிளைகளும் பொதுமக்கள் சேவையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக வங்கித்துறையில் அவ்வப்போது ஏற்படும் நவீன மயக்கமாக்கப்பட்டு வரும் சேவைகள் குறித்தும் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள், கடன் பற்றிய விபரங்கள், மின்னணு செயலிகள் மூலம் பணம் பரிமாற்றங்கள் போன்ற பல சேவைகளை எடுத்துரைக்கும் பொருட்டு அனைத்து வங்கிகளும் ஒரு இடத்தில் குழுமி வங்கிகளின் சேவைகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு மாபெரும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பு திட்ட முகாம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் நாளை (திங்கட் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி நடைபெற உள்ளது.

மேலும் முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பொதுத்துறை, தனியார்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளும் ஒன்றாக இணைந்து ‘வங்கிகளின் சங்கமம்' ஆக பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வங்கிக்கடன் பற்றிய விபரங்களையும், வங்கிகளின் இதர சேவைகளை பற்றியும் எடுத்துரைக்கவும், வாடிக்கையாளர்கள், விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தேவையான வங்கி தொடர்பான விபரங்களை தர இருக்கிறார்கள். 

எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான விளக்கங்கள் பெறுவதற்கு தங்களுடைய வங்கி கணக்கு புத்தகத்துடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments