நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு; புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு!புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அனைத்து பள்ளி கல்வி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

கலெக்டர் கவிதாராமு தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 116 பள்ளிகளில் இருந்து வேன், பஸ்கள் என மொத்தம் 546 வாகனங்கள் வர அறிவுறுத்தப்பட்டிருந்தன. இதில் 120 வாகனங்கள் மட்டுமே நேற்று ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன. 
இதில் வாகனங்களின் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்க பதிவேடு, நடப்பில் உள்ள முதல் உதவி பெட்டி, அவசரவழி, தீயணைப்பு கருவி, ஓட்டுனர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடை, படிக்கட்டுகள், கதவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டன. 
இதேபோல ஆய்வுக்கு வராத வாகனங்களை மற்ற நாட்களில் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வர அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments