உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆவுடையார்கோவில் அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!



ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது.

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் அயோடின் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் இன்றைய நவ நாகரீக யுகத்தில் மாறி வரும் உணவு பழக்க வழங்கங்களால் அயோடின் பற்றாக்குறையால் பலர் அவதிப்படுகின்றனர். 

ஆகவே, அயோடின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை களைய இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் தலைமையில், முதுகலை வரலாற்று ஆசிரியர் மதியழகன் உறுதிமொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். இதில், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments