அறந்தாங்கியில் நாளை (அக்.2) ஒரு நாள் இலவச ஆங்கில பேச்சு (Spoken English) பயிற்சி முகாம்!அறந்தாங்கியில் நாளை 02.09.2021 ஒரு நாள் இலவச ஆங்கில பேச்சு (Spoken English) பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திசைகள் அமைப்பு மற்றும் பாஸ்ட் ட்ராக் அகாடமி இணைந்து நடத்தும் ஒரு நாள் இலவச ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நாளை 2.10.2021 சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் பொற்குடையார்கோவில் அருகில் உள்ள IMA ஹாலில் நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சி முகாமில், அமெரிக்காவில் பணியாற்றிய, ஆங்கிலத்தில் புலமை பெற்ற சிறப்பான பயிற்சியாளர்கள் ஆங்கிலத்தை கற்க, சரளமாக பேச, எழுத சிறந்த திட்டமிடலுடன் கூடிய சிறந்த வழிகாட்டல் பயிற்சி மற்றும் பொது இடங்களில் அல்லது அலுவலகங்களில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத சிறந்த வழிகாட்டல் பயிற்சியளிப்பது இந்த முகாமின் சிறப்பம்சம் ஆகும்.

வயதோ கல்வியோ ஒரு தடையல்ல. பெரிய, பெரிய பட்டங்கள் வாங்கியிருந்தாலும் பல நேரங்களில் நேர்காணல்களில் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதலால் வேலைவாய்ப்பை நம்மில் பலர் இழந்து விடுகிறோம். பல நேரங்களில் ஆங்கிலம் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பேசத் தெரியாமல் கருத்துக்கள் அவர்களை விட சிறப்பாக தெரிந்திருந்தும், பேசத் தவறி விடுகிறோம்.

இந்தக் குறைகளை போக்க சரளமாக ஆங்கிலம் பேச ஒரு நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமில் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம்.

தொடர்புக்கு: 96006 80849

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments