போதையால் பாதை மாறும் இளைஞர்கள்! அதிரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!போதையால் பாதைமாறும் இளைஞர்களை நெறிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் எடுத்து வருகிறார்கள்.

இருந்த போதிலும்,போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதே நிலை நீடித்தால் நாளைய எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்வி குறியாகும் என்ற கவலை அக்கரை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது.

அடிப்படை போதை வஸ்த்துக்களான பான் மசாலா,ஹான்ஸ்,கூல் லிப்,சாந்த்தி இவைகளுடன் புதிய வரவுகளாக கருதப்படும் இன்னப்பிற அயிட்டங்களும் அதிரையில் சகஜமாக புலங்கி வருகின்றன.

இதிலிருந்து ஆரம்பிக்கும் பழக்கம் நாளடைவில் கஞ்சா, அய்ஸ், கொக்கையின் போன்ற படுபயங்கர போதைக்கு இளைஞர்களை இட்டு செல்கிறது.

இதனை தடுக்கும் நோக்கில், நாளை மாலை 5மணிக்கு அதிராம்பட்டிணம் அனைத்து இளைஞர் சமூதாய பேரவை அமைபினர் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டம் என்பது தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துகளை சகஜமாக சந்தைப்படுத்தும் வியாபாரிகள், துணை போகும் அதிகாரிகளை என ஆளும் வர்க்கத்தினரை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்ப உள்ளனர்.

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து பாதை மாறாமல் பிள்ளை செல்வங்களை கண்கானிக்க அழகிய அறிவுரைகளை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.

எனவே எந்த வேளையானலும் ஒரு மணி நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று 01.10.2021 மாலை 5 மணிக்கு நடைபெறும் போதைக்கு எதிரான அறப்போரில் கலந்து கொண்டு பாதைமாறிய இளைஞர்களை வென்றெடுக்க அழைக்கபடுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments