மீமிசலில் நாளை (அக்.27) விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் சிறப்பு முகாம்!புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், பொதுமக்களின் குறைகளை களைந்திடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் பேரில்,

ஆவுடையார்கோயில் தாலுகா மீமிசல் கிராமத்தில் 27.10.2021 அன்று காலை 11.00 மணியளவில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் மீமிசல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உப்பளம் அருகே அமைந்திருக்கும் புயல் பாதுகாப்பு கட்டடிடத்தில் நடைபெறவுள்ளது. இதில் கணினி நில ஆவணத்தில் பின்வரும் குறைகள் இருப்பின் உடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

1. புல எண்கள் / உட்பிரிவு எண்களில் திருத்தம்

2. பரப்பு திருத்தம்

3. பட்டாதாரர்கள் பெயர்கள் மற்றும் தந்தை / பாதுகாவலன் பெயர்கள் திருத்தம்

4. உறவு முறை திருத்தம்

5. பட்டாவில் விடுபட்ட விபர திருத்தம் 6. பரப்பு / பெயர் ஆகியவை அருகிலுள்ள பட்டாதாரர்களின் பெயர்களுடன் மாறியிருப்பது தொடர்பான திருத்தம்

மேற்படி குறைபாடுகள் குறித்து மனு செய்யும்போது, தற்போதைய கணினி சிட்டா, தொடர்புடைய பதிவு கிரைய ஆவணங்கள் மற்றும் 1970 ஆம் ஆண்டு முதல் நாளது தேதி வரை பெறப்பட்ட வில்லங்க சான்று மற்றும் இதர ஆவணங்கள் இருப்பின் அதனையும் இணைத்து மனு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாம் நடைபெறும் இடம் :
புயல் பாதுகாப்பு கட்டடிடம் கிழக்கு கடற்கரைச் சாலை மீமிசல், ஆலத்தூர்

நாள்: 27.10.2021 (புதன்கிழமை)

இப்படிக்கு... 
வட்டாட்சியர், ஆவுடையார்கோவில்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments