புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டனபுதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.

இதில் பட்டா மாற்றம், வேலைவாய்ப்பு, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 304 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில் அதன் பாதிப்பு பல இடங்களில் நேற்று காலை இருந்தது. இதனால் கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் நேற்று அதிக அளவில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments