அறந்தாங்கியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நரிக்குறவர்கள் பஸ் மறியல்!அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் நரிக்குறவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலுக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முகமதுஅலி ஜின்னா தலைமை வகித்தார். அறந்தாங்கியை அருகே கூத்தாடிவயலில் 250 நரிக்குறவர் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பயன்படுத்தி வந்த அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், இடிந்து விழும் நிலையில் உள்ள நரிக்குறவர்கள் வசித்து வரும் வீடுகளை பழுது பார்த்து கொடுக்க வேண்டும்.

அப்பகுதியில் தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் நரிக்குறவர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் சொர்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 16 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments