தொண்டி அருகே காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்
தொண்டி அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சோ்ந்த நபிஸ் (20), ஆரிஸ்(19), முனைப்பு(21) ஆகிய மூன்று பேரும் காரில் சனிக்கிழமை கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது வட்டாணம் ஓடவயல் அருகே திடீரென காா் தலைகுப்புறக் கவிழந்தது.


இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனா். அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments