பரிசு பொருளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: போலீசார் வேண்டுகோள்!!பரிசு பொருளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் அறிமுகம் இல்லாத நபர்கள் நண்பர்களாக இணையும் போது பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து உள்ளிட்டவற்றிற்கு பரிசு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து அனுப்புவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் விமானநிலையத்தில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது பணம் அனுப்புமாறு கூறினால் யாரும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாகவோ பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். தற்போது பணம் பறிக்கும் மோசடி கும்பல் சமூகவலைத்தளத்தில் தங்களது கைவரிசையை காட்டத்தொடங்கி விட்டனா். பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments