குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தமிழக வீரர்



 


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் நசீர் உசேன் (வயது 31). இவரது தந்தை சையத்தாவுத். கூலி தொழிலாளி. தாய் ஹசீனாபீ. இளைய சகோதரர் ஜாகிர் உசேன். பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நசீர்உசேன் கடந்த 2014-ஆம் ஆண்டு குவைத்தில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கும் அரசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

சொந்த ஊரில் இருக்கும்போது கிரிக்கெட் விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் உள்ளூர் அளவில் விளையாடி வந்துள்ளார். அதன் காரணமாக குவைத்தில் உள்ள ஸ்டேக் எனும் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து கடந்த 2014 முதல் விளையாடி வந்துள்ளார். இவரது விளையாட்டு திறமையை பார்த்து குவைத்தில் உள்ள சி.பி.கே. வங்கி இவருக்கு கணக்காளர் பணி வழங்கி கவுரவித்து உள்ளது.

மேலும் குவைத் முதல்தர கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்துள்ளார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற குவைத் பிரிமியர் லீக் ஆட்டத்தில் இரண்டு முறை சிறந்த பேட்ஸ்மேன் பட்டம் பெற்றுள்ளார். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் என்.சி.எம். இன்வெஸ்ட்மெண்ட் கம்ெபனி கணக்காளர் பணி கொடுத்து கவுரவித்துள்ளது. நசீர் உசேன் தற்போது குவைத் தேசிய அணியில் விளையாடி வருகிறார்.

அவர் கூறுகையில் உலக கோப்பை தகுதி சுற்று மற்றும் ஆசிய கோப்பை குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்று குவைத் அணி உலக கோப்பை போட்டியில் விளையாடும். ஆரம்பகட்டத்தில் வானவில் கிரிக்கெட் கிளப், உமாநாத்,கிரிக்கெட் கிளப், கிரேட் சாலஞ்சர்,கிரிக்கெட் கிளப் அகிய அணிகளுக்காக விளையாடிக் கொண்டிருந்தேன்.

இந்தநிலையில் தான் குவைத் வந்த எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஸ்டாக் கிரிக்கெட் கிளப் உரிமையாளர் ஜான் மெல்வின் (குவைத் தேசிய தேர்வாளர்கள்) மற்றும் என்.சி.எம். முதலீடு குர்ராம்சையத் மற்றும் ஷெரீப் தயார்பாசு,என்னை கவுரவித்த 2 நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும் காலங்களில் தமிழக அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் என‌ கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments