கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய பாசிச வாதிகளை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத திரிபுரா பாஜக அரசை  கண்டித்தும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ  கட்சியின் சார்பாக கிருஷ்ணாஜிபட்டினத்தில் நேற்று (29.10.2021) சுமார் 5 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அறந்தாங்கி சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவர் முஹம்மது அஜிஸ் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை தலைவர் Pms குலாம் முஹம்மது  மற்றும் தொகுதி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தொகுதி பொருளாளர் இஸ்மாயில் அவர்கள் தலைமை உரையாற்றினார். மேலும்,எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் U செய்யது அகம்மது மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் செரியலூர்இனாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜியாவுதீன் மாநில பொதுக்குழு உறுப்பினர் இப்ராஹீம்காசிமி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

 இக்கூட்டத்திற்கு  கிருஷ்ணாஜி பட்டினம் நகரத் தலைவர் சேர்கான் சேர்கான்  கண்டன கோஷமிட்டார். 

இறுதியாக அறந்தாங்கி வடக்கு தொகுதி செயலாளர் நன்றி உரையாற்றினார் எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments