புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (அக்.9) திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டைக்கான சிறப்பு முகாம்! கலெக்டர் தகவல்!!தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனைத்து தனி தாசில்தார்கள் (குடிமைப்பொருள் வழங்கல்) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

இந்த முகாம்களில் திருநங்கைகள் புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் தொடர்பான சான்று வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்ப ஆவணங்கள் சிறப்பு முகாமிலேயே www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இவ்வாய்ப்பினை திருநங்கைகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments