செந்தலைப்பட்டினம் ஜமாத் கமிட்டி சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு






அண்மைகாலமாக  நடைபெறும் திருமணங்களில் இஸ்லாத்தின் கண்ணியத்தை குலைக்கும் வகைகளில் ஓர் சிலர் திருமணங்களை நடத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த செந்தலைப்பட்டினம் ஜமாத் கமிட்டி சார்பாக இன்று (29/10/21) திருமணம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:-

1. திருமணங்களில் குதிரை மற்றும் பைத்துசபா பயன்படுத்த அனுமதி இல்லை.

2. திருமணங்களில் குரூப் சட்டை அனுமதி இல்லை.

3. மைக்செட் ( ஒலி பெருக்கி )
கட்ட கூடாது. லைட் மட்டும் கட்ட அனுமதி.

4. மாப்பிள்ளை வண்டியில் பின் சென்று ஹாரன் அடிப்பது, கூச்சல் இடுவது கூடாது.

5. திருமண நிகழ்ச்சியில் ஸ்ப்ரே அடிக்க கூடாது மற்றும் வெடி வெடிக்க கூடாது.

6. திருமண வீட்டைத்தவிர வேறு எங்கும் உணவு வழங்குதல் கூடாது.
 
7. நிக்காஹ் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

மணமகன் வருகையின் போது இது போன்ற அனாச்சாரங்களில் ஈடுபடுவதால் பொதுமக்களிடையே முகம் சுழிக்கும் வகையிலும் இது இஸ்லாத்திற்கு மாறுபட்ட செயலாக இருப்பதினால் இனிமேல் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் ஊர் பொதுமக்கள் ஜமாத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஊர் ஜமாத் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments