அற்புத அலையாத்திக் காடுகள் - முத்துக்குடா சுற்றுலா


அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரையிலும் ஃப்ரெஷ்ஷான மீன்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்குத் தீவு போன்று இயற்கையாகவே அமைந்த அலையாத்திக் காடுகள் அமைந்திருக்கிறது.

மணமேல்குடியைக் கடந்து கோட்டைப்பட்டினம், மீமிசல் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவே சென்றால் முத்துக்குடா பேருந்து நிறுத்தம் வருகிறது. அங்கிருந்து உள்ளே ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் முத்துக்குடா என்ற அழகிய கடற்கரை கிராமம் நம் கண்ணுக்குத் தென்படுகிறது. முழுவதும் மீனவ கிராமம். இங்குள்ள மீனவர்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குள் சென்று மீன் பிடி தொழிலைச் செய்து வருகின்றனர். இப்பகுதி பெண்கள் வலைகளைச் சரிசெய்வது உள்ளிட்ட உதவிகளைச் செய்கின்றனர்.

அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரையிலும் ஃப்ரெஷ்ஷான மீன்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்குத் தீவு போன்று இயற்கையாகவே அலையாத்திக் காடுகள் அமைந்திருக்கின்றன. அலையாத்திக் காடுகளுக்கு நடுவே இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே சில இடங்களில் மணல் திட்டுக்கள் அமைந்திருக்கின்றன. அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் இடமாகவும் இவை விளங்குகின்றன.

முத்துக்குடா அலையாத்திக் காடுகள்

கடலுக்கு நடுவே படகில் செல்லும்போது மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதையும், கால்வாய் ஓரங்களில் மரம் செடி கொடிகளில் நண்டுகளையும் நாம் கண்டு ரசிக்கலாம். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள், வாடகைக்கு நாட்டுப்படகில் சென்று முத்துக்குடாவின் அழகினைக் கண்டு ரசிக்கின்றனர். புயல் வெள்ளத்திலிருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழும் அலையாத்திக் காடுகள், முத்துப்பேட்டைக்கு அடுத்து முத்துக்குடாவில் இயற்கையாகவே காட்களிக்கிறது. முத்துக்குடாவின் அழகைப் படகு சவாரியில் சென்று சுற்றினாலும் அழுப்புத்தட்டாது.

முக்கியத்துவம் வாய்ந்த முத்துக்குடா விரைவில் சுற்றுலா தளமாக்குவதாக தற்போது சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. விரைவிலேயே கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, படகு குழாம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் முத்துக்குடா சுற்றுலாத்தளமாக மாறவிருக்கிறது. தற்போது, முத்துக்குடா செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு நாட்டுப்படகில் சென்று முத்துக்குடாவை சுற்றிப்பார்க்கலாம்.

முத்துக்குடா   எப்படிச் செல்வது?

திருச்சிக்கு அருகே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 36 கி.மீ தொலைவிலிருக்கிறது மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை. மணமேல்குடியிலிருந்து 24 கி.மீ தொலைவிலிருக்கிறது முத்துக்குடா. மணமேல்குடி கோடியக்கரை வந்து வருபவர்கள் அங்கிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையிலேயே வந்தால், 24 கி.மீ தொலைவில் முத்துக்குடாவை அடையலாம். நேரடியாக முத்துக்குடா வர விரும்புபவர்கள் அறந்தாங்கியிலிருந்து, ஆவுடையார்கோவில், மீமிசல் வழியாக 40 கி.மீ தொலைவில் முத்துக்குடாவை அடையலாம். பெரும்பாலும் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்களில் வந்து பார்த்து ரசித்துச் செல்வது நலம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments