கோபாலப்பட்டிணம் கிராம இளைஞர்களுக்கும் கோபாலப்பட்டிணம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை!!


கோபாலப்பட்டிணம் கிராம இளைஞர்களுக்கும்  கோபாலப்பட்டிணம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை!! 
                                                                                    நமதூர் கோபாலப்பட்டினத்தில் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக 
அறக்கட்டளை என்கிற பெயரில் இளைஞர்கள் பல்வேறு சமூக பணிகளையும் சேவைகளையும் பொது மக்களுக்கு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 24-09-2021 வெள்ளிக்கிழமை அறக்கட்டளையின் சார்பாக பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூடம் மற்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.இதில் சமூக செயற்பாட்டாளர் சகோதரி. சபரிமாலா அவர்கள் சிறப்புரையாற்றி கேள்வி பதில் போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும் இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க இளைஞர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வருவதை அறிந்த அவர்கள் அறக்கட்டளை வாயிலாக செய்த சமூக பணிகளையும் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து நேற்று அவர்களிடமிருந்து சமூக அர்பணிப்பாளர் விருது தங்கள் அறக்கட்டளைக்கு வழங்க உள்ளதாகவும் தங்களின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் கூறி விருதினை பெறுவதற்கு  அழைப்பும் விடுத்தார். இது தொடர்பாக அறக்கட்டளையின் ஆலோசனை குழு சகோ. முஹம்மது அபுதாஹிர் அவர்களிடம் பேசுகையில் இது முழுக்க முழுக்க அறக்கட்டளையை சேர்ந்த அனைத்து இளைஞர்களுக்கும்  நமதூர் ஜமாஅத் நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்கும் பொருளாதார உதவிகளை செய்து எங்களை ஊக்குவிக்கும் ஊரின் கண்ணியவான்களுக்குக்ம் கிடைக்கவேண்டிய விருதாகும். இது போன்ற சமூக பணிகளை இறைவனின் பேருதவியோடு தொடர்ந்து முன்னெடுப்போம்  என்று கூறினார். 

தகவல்: சகோ.B.அசாருதீன் -ஆலோசனை குழு- 

என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை-
கோபலப்பட்டிணம்
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments