பட்டுக்கோட்டையில் தனியார் மருந்துக்கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி மாத்திரையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் கைது


மருந்துக்கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி மாத்திரையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி, மாத்திரையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் இருவர் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூக்கத்திற்கு பயன்படும் மாத்திரையை போதைக்கு பயன்படுத்துவதற்காக அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் சீட்டு இல்லாமல் கேட்டதால், அந்த மாத்திரையை தர ஊழியர்கள் தர மறுத்துள்ளனர்.

இதையடுத்து ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி கடைக்குள் புகுந்து மேசையில் எடுத்து வைத்திருந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, இருவரும் தப்பி ஓடினர். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிய போதும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் பட்டுக்கோட்டையை ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் காவலர்களை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments