சவூதி ரியாத்தில் இறந்தவரின் உடல் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் கோவை தமுமுக மமக உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!சவுதி அரேபியா ரியாத் நியூ செனையா பகுதியில் பணிபுரிந்து வந்த கோவை குறிச்சி சுந்தராபுரம் காந்திஜி தெருவை சேர்ந்த பரமசிவம் அவர்களுடைய மகன் சண்முகம் (வயது 49) என்பவர் கடந்த 28.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

அவருடன் பணிபுரிந்த, IWF செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை சகாபுதீன் அவர்கள் மண்டல செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தகவலை தர, மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்களுடன் IWF செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை சகாபுதீன் இணைந்து இந்திய தூதரக உதவியுடன் ஒரு வாரத்திற்குள் இறந்த உடலை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கொச்சி விமான நிலையத்தில் சண்முகத்தின் மகன் நவீன் மற்றும் தமுமுக மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் முகமது ரபிக், கோவை மத்திய மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சதாம் உசேன், பொருளாளர் ஜியாவுல் ஹக், துணை செயலாளர் ஆம்புலன்ஸ் டிரைவர் சபியுல்லா ஆகியேர் சண்முகத்தின் உடலை பெற்று கோவை மாவட்ட தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இறந்த உடலைப் பெற்றுக் கொண்ட சண்முகத்தின் குடும்பத்தினர் சண்முகத்தின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக எங்களுக்கு உதவி செய்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகளுக்கும் கொச்சி விமான நிலையத்திலிருந்து கோவை மாநகருக்கு கொண்டு வர உதவிய கோவை மாவட்ட தமுமுக மற்றும் மமகவினர்க்கு நன்றி கூறினார்கள்.

தகவல்
ஊடகப்பிரிவு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் 
மத்திய மண்டலம், 
ரியாத், 
சவுதி அரேபியா.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments